அரசு தேர்விற்கு தயாராவோர் OPEN OFFICE மென்பொருளை பதிவிறக்கம் செய்வதற்கான லின்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்-ஓப்பன்ஆபீஸ் உங்களை வரவேற்கிறது!!!
OpenOffice - இது ஒரு விடுதலை மனப்பாங்கோடு உருவான மென்பொருள் ஆவணத்திட்டம். இதன் அடிப்படை கொள்கை வாசகம்: "ஒரு சமுதாய முயற்சியாக, முன்னோடியான பன்னாட்டு பயன்பாட்டிற்கு உகந்த , அனைத்து முக்கிய அடிப்படை செயலிகளிலும் இயங்கக்கூடிய அலுவலகப் பயன்பாட்டுச் செயலித்தொகுப்பை உருவாக்குவது மற்றும் இத்தொகுப்பின் அனைத்து செயல்பாடுகளையும் மற்ற செயலிகளிலும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் திறவூற்று ஆணையின் கீழ் APIகளாகவும் XML சார்ந்த கோப்புப் படிவமாக அளிப்பது ஆகும்."
OpenOffice என்பது , இதன் அடிப்படையில் உருவாக்கப்படும் மென்பொருள் தொகுப்பையும் குறிக்கும். இது ஒரு பரி அலுவலக மென்பொருற்தொகுப்பாகும். இதில் உரைதொகுப்பு செயலி, விரிவுத்தாள், வழங்கல், வரையும் செயலி, ஹெச்டிஎம்எல் தொகுப்பி முதலியவை அடங்கும். இந்த அலுவலக மென்பொருள்தொகுப்பு அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்ககூடியது. இது தற்போது விற்பனையில் இருக்கும் மற்ற அலுவலக மென்பொருள்தொகுப்புகளுக்கு நிகரானத் தரத்தில் உள்ளது. ஆகையால் இது மற்ற விலைக்கு விற்கப்படும் அலுவலக மென்பொருள்தொகுப்புகளுக்கு ஒரு இலவச மற்றும் தரமான மாற்றாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்-ஓப்பன்ஆபீஸ் OpenOffice இன் துணைத் திட்டமாகும். இதன் நோக்கம் இத்திட்டத்தையும் இத்திட்டதில் உருவாக்கப்படும் செயலிகளையும் உலகெங்கும் பரந்த தமிழ் பேசும் மக்களுக்கு கொண்டு செல்வதே.
இத் தமிழ்-ஓப்பன்ஆபீஸ் திட்டத்தினுள் , தமிழ் மக்களுக்கு முக்கியமானதாகக் கருதப் படும் கீழேயுள்ள விடயங்களில் அதிக கவனஞ் செலுத்தப்படுகிறது:
- கணித்தமிழ் தகவல் அளிப்பு (வலைப்பக்கங்கள் மற்றும் ஆவணங்கள்).
- தமிழ் மொழியில் இச்செயலித்தொகுப்புகளை (நடப்பு பதிப்பில்) வழங்குவது.
- இவற்றைப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய இணையத் தளங்களை(mirror sites) அமைப்பது.
- தமிழ் மொழியாக்கத்தை நெறிபடுத்துவது.
- சொற்திருத்தி போன்ற மொழி சார்ந்த துணைச்செயலிகளை உருவாக்குவதும் மற்றும் நெறிப்படுத்துவது.
- OpenOffice திட்டத்தினை தமிழ் பேசும்/எழுதும் வட்டாரங்களில் பிரச்சாரம் செய்வதும் மற்றும் சந்தைப்படுத்துதலும்.
தமிழ்-ஓப்பன்ஆபீஸ் என்பது ஏற்கனவே உள்ள OpenOffice திட்டதுடன் இணைந்து செயலாற்ற உருவாக்கப்பட்டது (அதனை அப்புறப்படுத்த அல்ல). அதனால் தான் இங்கே இருக்கும் பலசுட்டிகள் இத்திட்டதின் ஆங்கில பக்கங்களுக்கு சுட்டப்படுவதை காண்கிறீர்கள்.
இப்பக்க உலாவல்: வலது பக்கம் உள்ள பெட்டியில், நீங்கள் தமிழ்-ஓப்பன்ஆபீஸ் தளத்திலுள்ள பக்கங்களுக்கான வலைச்சுட்டிகளை காணலாம்.
இந்த தமிழ்-ஓப்பன்ஆபீஸ் பக்கங்கள் அனைத்தும் பொதுவான OpenOffice வலைதளத்தினுள் அடங்கியிருக்கிறது. இப்பக்கத்தின் மேலேயும், இடது புறத்திலும் நீங்கள் இத்தளத்தின் ஆங்கில பக்கங்களுக்கான வலைச்சுட்டிகளை காணலாம்.
தமிழ்-ஓப்பன்ஆபீஸ் குழுவினர்.