அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த அரசு திட்டம். தமிழ்நாடு JULY 2020
இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
வழக்கமாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பங்கள் பெறுவதற்கும் மாணவர் சேர்க்கைகாவும் நேரடியாக கல்லூரிகளுக்கு வருகை தருவது வழக்கம். இதன் காரணமாக அதிகளவு மாணவர்கள் திரள்வார்கள்.
அதிகளவு மாணவர்கள் கல்லூரிகளில் திரள்வதை தடுக்கும் வகையில் தற்போது ஆன்லைன் முறையில் மாணவர் சேர்க்கை நடத்த உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இதற்கான பிரத்யேக மென்பொருள் மற்றும் வலைத்தளத்தை வடிவமைக்கும் பணியில் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் ஈடுபட்டுள்ளது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்தபின் இடஒதுக்கீடு அடிப்படையில் கல்லூரியில் சேருவதற்கான அழைப்பானைகள் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக